சீர்பெற்றோங்கிய நெடியகடல்சூழ்ந்த சம்புத்தீவின் கண்ணளவாய் மிகுந்தோங்கிய தொண்ட மண்டலத்தைச் சார்ந்த மலைகளும், குன்றுகளும், நீர்வளம், நிலவளம் பொருந்திய சாலை சோலைகள் தாமரைத் தடாகங்கள் நந்தவனங்கள் தேவாலயம், பிரமாலயம், விஷ்ணுவாலயம் இப்பேர்க்கொத்த விநோதங்களும் மிகுந்த கூட கோபுர மாடமளிகைச் சிங்கரமண்டபம் விசித்திர விநோதங்களும் வாய்ந்திலங்கா நின்ற தருமாபுரி யென்றொரு பட்டணமுண்டு அந்தப் பட்டணத்தைப் பரிபாலனஞ் செய்யா நின்ற போஜமஹராஜ னென்றோர் இராஜன் அரசு செய்துகொண்டிருந்தான். அவன் நாண்டு வேதம் ஆறுசாஸ்திரம் பதினென்புரானம் அறுபத்து நான்கு கலைக்கியானம் தொணநூற்று தத்துவங்கள் மநுவிக்கியான முதல் மற்ற யாவுங் குறைவில்லாமற் கற்றுணர்ந்தவனாய்ப் பிரம்ம, ஷத்தரய, வைசிய, சூத்திரராகிய இந்நான்கு வருணத்தாரும் புகளும்பதியாயக் குடிகளிடம் ஆறிலொரு கடமை வாங்கிகொண்டு மனுநெறி வழுவாமல் ஆராய்ச்சிமணி கட்டி, மந்திரி பிரதானிகள் சூழ இராஜ்ய பரிபாலனம் பண்ணிக்கொண் டிருந்தான்.
அப்படி யிருகின்ற நாளையிலே ஒருநாள் முதன் மந்திரியாகிய நீதிவாக்கியனை யழைத்து நாம் வேட்டை மார்க்கமாய்ப் போகவேண்டும். ஆனபடியால், நம்முடைய இரதகஜதுரகபதாதியாகிய நால்வகைச் சேனைகளையும் கூடப் பிரயாணப் படும்படியாய்ச் சொல்லுமென்று இராஜன் மந்திரிக்கு சொல்ல, அப்போது நீதிவாக்கிய மந்த்ரி அப்படியே நால்வகைச் சேனைகளை யெல்லாம் பிரயனப்படுத்த போஜமஹராஜன் தன்னுடைய ஆடையாபரணாலங்கிருதனாய் ஆயுத முவஸ்தீப்புடனே நால்வகைச் சேனைகள் மந்திரி பிரதானிகள் சூழப் புறப்பட்டுக் காடு, மலை, வனம், வனாந்திரமுங் கடந்து ஆரண்ணியமான காட்டிற்சென்று கரடி,புலி, சிங்கம் முதலாகிய மிருகங்களை வேட்டையாடி விடாய் கொண்டு சதுரங்க செனையுடனே தனது நகரத்தை நோக்கி மார்க்கத்தில், சரவணப்பட்ட நெந்கின்ற ஒரு பிராமணன் கம்புக் கொல்லைக்குக் காவலாகப் பரண் கட்டிக்கொண்டு அதின் மேற் காவலிருந்தான். அப்படி யிருக்கையில் போஜராஜனும் சேனைகளுங் கூடிக் கொல்லையருகே வருகிறபோது அககொல்லையைக் காதுக்கொண்டிருக்கிற பிராமணன் பரண்மேலிருந்து வருகின்ற சேனைகளைப் பார்த்து சொல்லுவான். ஓகோ சேனைகளே! நீங்கள் மொத்தவும் பசியாய்த் தண்ணீர் விடாய்ப்பட்டுப் போகின்றீரே, இதோ என் கம்புக் கொல்லையில் கம்புக்கதி ரிருக்கின்றது அதைப் பறித்துத் தின்னுங்கள். அது வேண்டமென்றால் வெள்ளரிக்காய் விரைத்திருக்கிறேன் அதையாவது தின்று பசியாறிப் போங்களென்று பிராமணன் சொல்ல, அந்த வார்த்தையைக் கேட்ட போஜராஜனும் சேனைகளும் நல்லதென்று கம்புக் கொல்லையிற் புகுந்து கம்புக் கதிர்களையும் வெள்ளரிக் காய்களையும் பறித்துத் தின்றார்கள் . அந்தச் சமயத்தில் பிராமணன் பரண்விட்டுக் கீழே யிறங்கி, ஐயோ கூ கூ வென்று கூச்சலிட்டு ஓகோ சேனைகளே! என் கம்புக் கொல்ல்லையை அழிக்கவா வந்தீர்கள். இதென்ன அநியாயம் கேள்விமுறை யில்லையோ வென்று கூச்லிட்டான். அதைக் கேட்ட போஜராஜனும் அவன் படைகளும் பயந்து வெளியில் வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு பிராமணன் தன்னுடைய பரண்மே லேறிக்கொண்டு சேனைகளைப் சொல்லுவான். ஓகோ சேனைகளே! நீங்களேன் கம்புக் கதிரையும் வெள்ளரிக்காயையும் சாபிடமற் போகிரீறென்ன அந்த வார்த்தையைக் கேட்ட போஜமஹராஜன் தனது நீதிவாக்கிய மந்திரியை அருகிலழைத்து ஓகோ கேளாய் மந்திரி!
இக்கொல்லையை காத்திருகின்ற பிராமணன் பரண்மீதிருந்தபோ திரக்கமாகிய வார்த்தையும் பரணைவிட்டுக் கீழிரங்கியபோது மிக்க கொடூரமாகிய வார்த்தையும் அவ்விதமாக இரண்டு வார்த்தைகள் அவனிடத்தில் உண்டாயிருபதால் எது அதிசயமாக விருக்கிறதென்று சொல்ல, நீதிவாக்கிய மந்திரி இராஜனைப் பார்த்து, ஒரு வார்த்தை சொல்லுவான்; ஆனால், கேளும் மகாராஜரே! அந்தப் பிராமண னேறியிருக்கிற பரணின் கீழ் ஏதாவதொரு அதிசயமிருக்கவேண்டும் இல்லாவிடில் அவன் அப்படிச் சொல்லமாட்டான். இதை நாம் பரிசோதிக்க வேண்டும்மென்று சொல்ல, அப்போது போஜ மகாராஜன் பிராமணனை யழைத்து, ஓ பிராமணரே! உமது கம்புக் கொல்லையை நாங்களழித்ததாகக் கூக்குரலிட்டீரே நல்லது இருக்கட்டும். நாங்கள் உன் கொல்லைக்குப் பதில் கொல்லையும், சில கிராமங்களும் வெகுமானமாகக் கொடுக்கிறோம். ஆதலால் , இந்தக் கொல்லையை எனக்கு கொடுக்கச் சம்மதமோவென்று கேட்க , அப்போது சரவணப்பட்டனென்கிற பிராமணன் சொல்லுவான். ஓகோ மகாராஜனே! தாங்கள் என்னை ஒரு பொருட்டாக யெண்ணிக் கம்பு கொல்லையை கேட்கிறபடியால் உங்களுக்கு த்தடை சொல்லக்கூடாது. நல்லது, அப்படியே கொடுக்கிறேன்னென்று சம்மதிக்க, போஜராஜன் பிராமணனுக்கு சில கிராமங்களுஞ் சில பொருள்களுங் கொடுத்து அந்தக் கொல்லையைத் தமக்குச் சொந்தம்மாக்கிக்கொண்டு சிலபேர் ஒட்டர்களைவிட்டு அந்தப் பரன்கீழே வெட்டிப் பரிசோதிக்கும்படியாய்ச் சொல்ல அப்படியே ஒட்டர்கள் மண் வெட்டிக்கொண்டு வெட்டிச் சோதிக்கும்போது, அதிலே நவரெத்தின கசிதமான பொற்பீடங்கள் அமைத்து முப்பத்திரண்டு படிகளுடன் முப்பத்திரண்டு பதுமைகளுஞ் சூழப் பிரகாசம் பொருந்திய நவரெத்தின சிங்காதனமொன்றிருந்தது
அதைக் கண்டு போசராஜனும் நீதிவாக்கிய மந்திரியும் சகல சேனைகளும் சந்தோசமடைந்து தமது நகரத்திற்கு கொண்டுபோக வேண்டுமென்று கருதிச் சேனைகள் சூழத் தருமாபுரியைச் சேர்ந்து தம் சிங்காரமண்டபத்தில் இந்தச் சிங்காதனத்தை நிறுத்தி அந்த சிங்கதனதில் போஜராஜன் வீற்றிரிகும்படியாய் ஏவலாளர்களால் சுத்தி செய்து நான்கு வேதங்கலுணர்ந்த வேத வேதியர் யாசககர்தாகள் வித்துவான்கள் ஜோதிடநூலோர் இவர்கலெலாரையும் வரவழைத்து நல்ல சுபமுகூர்த்தத்தில்