Sunday, October 27, 2013

இச்சரித்திரம் மியற்றி அச்சிட்டவர்கருத்து

1-வது, இவ்வுலகின் கண் மாக்ஷிமை தங்கிய நேயர்களே ! ஆதியில் சீருஞ் சிரபுமுள்ள விக்ரமாதித்தன்  பட்டி என்பவர் பூர்விக சரித்திர முதலிய யாவும், அவர்கள் இரா ஜரீயஞ்ச் செய்கையில்  தேவேந்திரனார் கொடுக்கப்பட்ட ஆயிரத்தேன் மாற்ற்றுடைய நவரெத்தின கசிதமுள்ள முப்பத்திரண்டு பிரதமை சூழ்நத சிங்காதனதைபெற்று பிரமகுலமாகிய வேதாளத்தையே வாகனமாக்கிகொண்டு மேற்சொல்லிய சிங்காதனத்தில்(2000) வருடம் காடாருமதம் வீடாருமதம் அரசு செய்திருந்தா ரல்லவா?

2-வது, மேலும் அச் சிங்கதனதிளிருந்து பின்பு சாலிவாகனனால் உயிரிழந்து கைலாயபதவி   யடைந்து பின்னர் அச் சிங்காதனம் பூமியிலழுந்தி  மண்மேடிட்டு சிலகாலஞ் சென்ற பின்பு வீரசூரதீர பராக்கிரமகிய போஜமஹரஜனுடைய மந்திரியால வெளியரங்கமாயிற்றல்லவா ?

3-வது, அந்த சிங்காதனத்தின் பிரதமைகளால் விக்கிரமாதித்தன் பட்டி இவர்களுடைய வல்லபங்களையும் துர்ப்பலங்களையும்  போஜமஹராஜனுக்கு மணிப்பிரதமைகள் வாய்மொழி கூற, அவ் வாகியார்த்தங்க்களை மஹா மகத்துவம் பொருந்திய ஜீவகாருண்ணியமுடைய தபோதனர்கள் முனிவர்கள் ரிஷிகளாகிய எவர்கள் சம்ஸ்கிருத வாகியங்களாய்ச் செய்திருந்தார்க ளல்லவா ?

4-வது, அந்த சம்ஸ்கிருத வாக்கியங்களைச் சில பெரியோர்கள் தமிழ்பதம் பிரித்து வசனரூபமாக மொழி பெயர்திருந்ததை இங்ஙனம் சிற்றறிவுடைய சிறியேன் மேற்படி பிரதிகளை பார்வையிட்டதில் அவ் வாகியார்த்த பதங்களில் சில வசனங்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமலும், பதம் பொருந்தாமலும், கதையலங்கரம் நீங்கியும், சரித்திரம் வேறுபட்டு மிருந்தன.

5-வது, மேற்சொல்லிய சரிதிராலங்காரத்தை யாவரும் எளிதிலுனரும் பொருட்டுச் சொல் லங்காரமாகவும் பொருட்பதம் பிரித்து சகலரும் ஆனந்த மகிழ்ச்சி யடையும்படி நூதன விசேஷமான வாகியார்தங்களை மித்திரமின்றிச் சித்திரவிச்சித்திரமாக நிர்ணயத்திருக்கின்றேன்  . அல்லாமலும், மேற்கூறிய சரித்திரத்தை வாசித்துப் பார்த்தவர்கள்  இக் கருத்தை எளிதி லுணர்வார்கலென்று முழுதும் நம்புகிறேன்.

6-வது, என் வருந்தால் விண்ணப்பமாவது: கனம் பொறுந்திய  சிநேகிதர்களே! எதற்கு முன்னம் அச்சிட்டிருக்கிற முப்பத்திரண்டு பதுமை கதையொன்று வழங்கி வருகிற சரித்திரத்தில் வேதாளத்தை (24-ம்) அதில் பதுமை கதைகளும் விக்ரமாதித்தன் பட்டி யென்பவர்களின் சங்கதியில்லாமல் ஒருவாராக முற்காலதுச் சரித்திரத்தையும் நீக்கி இக்காலத்துச் சரித்திரத்தையும் போக்கி அச்சிட்டிருக்கிறார்க ளல்லவா ?

7-வது, மேற்சொல்லிய சரித்திரத்தில் போஜமஹராஜாவின் ஜீவிய சரித்திரம் ஊர்பதி யில்லாமல்  தாறுமாறாய் கதைகேட்டு ஒருவாறாகப் பேர்மாத்திர மிருப்பதால் மற்ற சரித்திரங்களிலே மரபு முறைமை தெரியாமல் மநுநீதி சரித்திரங்கள் இரண்டு விக்கிரமாதித்த னென்கிற இயற்பேருடைய கதை யியற்றி மாறாகக் கூறலாலும் மேற்கூறிய விக்ரமாதித்தன் பூர்விகச் சரித்திர வரலாறும் முப்பத்திரண்டு பதுமைகள் சொல்லிய ஜீவிய சரிதிரவரலாறும், ஆதியோடந்தமாகப் பார்வை யிட்டவர்க்கு இதினுணுக்கம் கூடியவரையில் எளிதில் உணர்வார்களென்று பெரும்பாலும் நம்புகிறேன்.

8-வது , இப்போது யானியற்ற்ய கதையும் முன்னம் அச்சிட்ட கதையும் ஒன்றோடொன்று ஒற்றுப பார்த்தால் சரித்திர வித்தியாசங்களை எளிதிலறியலாம். அன்றியும், இவ்வுலகில் விக்கிரமாதித்த மகாராஜா நாள் தொடங்கி இதுபரியந்தம் அரசகஷிசெய்த இராஜாக்களிற் எவ்வளவோ சக்கரவர்த்தி மநுநீதி செலுத்தி இருப்பார்கள். அவர்களில் நளன், அரிச்சந்திரன், புரூரவச்சிக்கரவர்த்தி, மடாதிபதி, கிரீடாதிபதி முதலிய பூர்விக ராஜர்களும் இப்போதுள்ள ராஜர்களும் அநேகர் இருந்தார்கள்ளவா?

9-வது, அன்றியும் மேற்சொல்லிய ராஜாக்களில் இவரைபோல் செளரியமும், பராக்கிரமும், கீர்த்தியும், உதாரதிறமும், முப்பதிறண்டரமும், செங்கோல் முறைமையும் மநுநீதிவழுவாமல் அரசு செலுத்திய மன்னர்களில்லையென்று சொல்லலாம், மேலும் பதிநேன்பாஷைகளில் அரபி, இந்துஸ்தான், இங்கிலீஷ், தெலுங்கு, தமிழ், பாரிசு இப்பாஷைகளிலும், இப்பேர்ப்பட நேர்த்தியான செவிக்கின்பமுள்ள சரித்திரங்களை நாம் கண்டறிய மாட்டோம். கருத்தாளிகளின்  இதினுடைய நுட்பதயை கண்டறியகூடும்.

10-வது, சிறியேன் எவ்வளவோ கஷ்டப்பட்டு எந்த சரித்திரத்தை எயாற்றி அச்சிடத் துணிந்தேன். எதில் பெரும்பாலும் எழுதுக்குற்றம், சொற்குற்றம், பொருட்குற்றம் மிருப்ப்னும் பெரியோர்கள் மனம் பொறுத் தங்கீ கரிப்பார்களாக.

From Muthu - I am trying my best to put it as it is. Again, if there is any mistake. please let me know. we will fxi it.

1 comment:

THIRUVARUL PRAKASAM said...

Very nice post sir
இந்த கால குழந்தைகளுக்கு விக்கிரமனின் வீர தீர சாகசங்களை அறிய வாய்ப்பு மிகவும் குறைவு.....

90ல் பிறந்த குழந்தைகளோடு விக்கிரமன் சரித்திரம் இன்றுவரை மீளா துயிலில் உள்ளது....

உங்களிடம் உள்ள புத்தகத்தின் அனைத்து படங்களையும் Blogல் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

இவன்
விக்கிரமாதித்தனின் ரசிகன்